Budamangalam.com

உலகின் மிக இளம் வயதில் Microsoft Certified Professionals (MCPs) என்ற பட்டத்தை பெற்ற அர்பா கரீம் என்ற சிறுமி 14/1/2012 இரவு வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன். பாக்கிஸ்தான், பைசலாபாத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1995இல் பிறந்த (16 வயது) இவர்தான் உலகில் மிக சிறிய வயதில் Microsoft certified professional (2004 - 2008) பெற்றவர். மேலும் 2005 ம் ஆண்டு விஞ்ஞானத்திற்கும் தொழில்நுட்பத்திற்குமான Fatimah Jinnah Gold Medalஐ பாக்கிஸ்தான் ஜனாதிபதியிடமிருந்து பெற்றார். சாதாரண மனிதர்கள் தமது முழு வாழ்க்கைக் காலத்தில்
சாதிக்க முடியாததை அவர் பதினாறு வயதுக்குள் சாதித்து விட்டார். பாகிஸ்தானின் அதி உயர் சிவில் விருதைப் பெற்றுக் கொண்ட மிக இளம் வயது நபர் அர்பாதான். இதற்க்கும் மேலாக சலாம் யூத் விருதை ஜெனரல் முஸாரப் அவர்களால் பெற்றுள்ளார்.

சென்ற வருடம் லாகூரில் உயர்த்தர படிப்பை மேற்கொண்டிருந்த வேளையில் அவருக்கு ஏற்பட்ட வலிப்பு நோயும் அதனை தொடர்ந்து வந்த மாரடைப்பும் (Cardiac arrest) அவரை தாக்க அதற்கான சிகிச்சைகளை லாகூர் இராணுவ வைத்தியசாலையில் மேற்கொண்டு வந்தார். இவரின் சுகயீனம் பற்றி அறிந்தMicrosoft நிறுவனத்தின் தலைவர் Bill Gates அர்பாவின் பெற்றோரை சந்தித்து.அவரின் சிகிச்சைக்கான முழுச்செலவையும் ஏற்றுக் கொண்டதோடு, அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை வழங்குவதற்கும் முன்வந்தார். இருப்பினும் 2 நாட்களுக்கு முன் மூளையின் சில பாகங்கள் செயலிழந்ததால் கடும் சுகயீனத்துக்கு ஆளானார்.அதனை தொடர்ந்து நேற்று இரவு எந்தவித சிகிச்சையும் பலனளிக்காது லாகூர் வைத்தியசாலையில் வபாத்தானார். அர்பா கரீமின் இழப்பு அவரின் குடும்பத்துக்கு மட்டுமன்றி எதிர்கால தகவல் தொழில்நுட்பத்துறைக்கும் ஒரு மிகப்பெரிய இழப்பாகும். சிறிய வயதாக இருந்தாலும் அவர் சொல்லிச் சென்ற வார்த்தைகள் பெரியவை.If you want to do something big in your life, you must remember that shyness is only the mind. If you think shy, you act shy. If you think confident you act confident. Therefore never let shyness conquer your mind.அர்பா கரீமின் இழப்பு அவரின் குடும்பத்துக்கு மட்டுமன்றி எதிர்கால தகவல் தொழில்நுட்பத்துறைக்கும் ஒரு மிகப்பெரிய இழப்பாகும்.



Bill Gates அவர்கள் தனது டிவிட்டரில் "Our thoughts are with Arfa’s family and many friends at the loss of this bright young woman"என்று இரங்கல் செய்தி கொடுத்துள்ளார்.
hod

Salahuddin
இது போன்ற திறமைசாலி நம் அணைவருக்கும் ஒரு முன் மாதிரி, இவரின் இழப்பு நமது சமுதாயத்திற்க்கும் பேரிழப்பாகும்.இறைவன் இவருக்கு சொர்கத்தை வழங்குவானாக.
Posted On: 1/16/2012 8:18:59 AM

Name:
Email ID:
Current Location:
Message:  
nstarIndicates Input is Mandatory
space
Youngest MCPHas Died
மூக்குக் கண்ணாடி கம்பியூட்டர்
Kim Jong-II Virus
Download வீடியோ clip
Facebook புதிய Subscribe வசதி
Eye-Fi card
சமுதாய வலைத்தளங்கள்
Retrieve deleted files
Computer பற்றிய உங்களின் வினாக்களுக்கு நமது Expertக்கள் தங்களால் முடிந்த சரியான பதிலை உங்களுக்கு தருவார்கள்.

Al Maraj Trading
Contact for Advertisement