Budamangalam.com

பூதமங்கலம் (ஆங்கிலம்: Budamangalam) பண்டைய காலத்தில் 200 வருடங்களுக்கு முன்பு இங்குள்ள பகுதி சாத்தனுார் ஜமீன்தாரருக்கு சொந்தமாக இருந்தது. முற்றிலும் மரங்கள், இலை செடி கொடிகள் என்று படர்ந்திருந்த நிலப்பரப்பு. அந்த கால கட்டத்தில் அங்கு வந்த பௌத்தர்கள் சிறிது காலம் இந்த பகுதியில் தங்கியிருந்தனர் இவர்களுக்கு ஜமீனிலிருந்து எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்து மேலும் ஜமீனில் உள்ளவர்கள் இந்த ஊரை ஒரு அடை மொழிக்காக பௌத்தர்களுடைய பேருடன் மங்கலம் என்ற சொல்லை இணைத்து பௌத்தமங்கலம் என்று அழைத்து வந்தார்கள். ஊரின் கிழக்கு பகுதியில் ஒரு கோயிலும் அதன் எதிர்புரம் ஒரு கேனியும் இருந்தது, அந்த கேனியில் ஒன்பது கினறுகள் இருந்தது (இந்த கேனி இண்றளவும் பராமறிக்கப்பட்டு வருகிறது அதிலுள்ள கினறுகளை இன்றும் பார்க்காலம்).
இதை பார்த்த பௌத்தர்கள் ஊரின் கிழக்கு பகுதிக்கு நவக்கிரகநல்லூர் என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். சிறிது காலமே தங்கியிருந்த பௌத்த பிட்சுகள் இயற்க்கை சீற்றத்தால் வேறு இடத்திற்க்கு இடம் பெயர்ந்து விட்டனர். பின்னர் சாத்தனுார் ஜமீனிடமிருந்து நிலங்கைள வாங்கி ஊரின் மேற்க்குபுரத்திற்க்கு கனிசமான பல குடும்பங்கள் புலம் பெயர்ந்து வந்துள்ளனர்.

பௌத்தர்கள் இடம் பெயர்ந்தாலும் ஜமீனில் உள்ளவர்கள் இந்த பகுதியை பௌத்தமங்கலம் என்றே தொடந்து அழைத்து வந்தார்கள். ஆனால் காலத்து சுலட்சியினால் புலம் பெயர்ந்து வந்த மேற்க்கு புறத்து மக்களுடைய பேச்சு மொழியில் இந்த இரு ஊரின் பெயர்களும் மருவி பௌத்தமங்கலம் என்பது பூதமங்கலம் என்றும் நவக்கிரகநல்லூர் என்பது வக்கிராநல்லூர் என்றும் அழைக்கப்பட்டு அரசு ஏடுகளில் மாற்றப்பட்டது.

மேலே குறிப்பிட்ட விபரங்கள் நமது ஊரின் ‌பெயருக்கு சப்பை கட்டும் விழக்கம் என்று நீங்கள் நினைக்ககூடும், ஆகையால் இதன் உண்மையை மேலும் தோண்டிப்ப பார்க்‌கையில் ‌பௌத்தர்கள் பற்றின தமிழ் விக்கிபீடியா மற்றும் சில தமிழ் Block க்குகள் வழியாக கிடைத்த தகவல்கள் இந்த வரலாற்றை ‌மெய்பிக்கிறது. ‌புத்தர் சொன்னது போல் எதையும் உன் அறிவைக் கொண்டு நன்றாய் ஆராய்ந்து பார். உனக்கு விளங்காத தன்மையில் சொல்லப்படும் வெறும் கற்பனைச் சொற்களை நம்பாதே உலகில் உள்ள சீவன்களில் எல்லாம் மனிதன் எப்பொருளையும் ஆராய்ந்து பகுத்தறிந்து உணரும் உயர்ந்த அறிவுள்ள சீவன் ஆவான் என்றார். ஆகவே நீங்களும் இந்த விபரங்களை ஆராய்ந்து பார்த்து உண்மையை கண்டறியுங்கள்.

தமிழகத்தில் பௌத்தமும், சமணமும் பெரும்பான்மை தமிழ் மக்களின் மதங்களாக இருந்தன. தமிழ் மொழிக்கு சிறப்புச் சேர்க்கும் ஐம்பெரும் காப்பியங்களில், சிலப்பதிகாரம் தவிர்த்து மற்ற நான்கும் பௌத்த மதப் பின்னணியில் எழுதப் பட்டுள்ளன. ஐரோப்பியர்கள் வானாந்தரங்களில் வாழ்ந்த காலத்தில், பீகாரில், நாலந்தா பல்கலைக்கழகம் இயங்கிக் கொண்டிருந்தது. (கி.மு. 5 - கி.பி. 1193) அதில் கல்வி கற்பதற்கு சீனாவில் இருந்தும் மாணவர்கள் வந்தனர். காஞ்சிபுரம் பல்கலைக்கழகமும், நாலந்தா பல்கலைக்கழகமும் பௌத்த மத மேற்படிப்புக்காக உருவாக்கப் பட்டவை. அங்கே அறிவியல் பாடங்களும் போதிக்கப் பட்டன.

வடக்கே இஸ்லாமியரான துருக்கிய இனத்தவர்களின் படையெடுப்பினால், நாலந்தா பல்கலைக்கழகமும் அதன் அறிவியல் செல்வங்களும் அழிக்கப் பட்டன. தெற்கில், இந்துக்களான பல்லவர்களின் படையெடுப்பினால் காஞ்சிபுரத்தின் அறிவுச் செல்வங்கள் அழிக்கப் பட்டன. பல்லவர்கள் பௌத்த, சமண மடாலயங்களை தீ வைத்துக் கொளுத்தினார்கள். சமணக் கோயில்களும், பௌத்த விகாரைகளும் இந்துக் கோயில்களாக மாற்றப் பட்டன. பௌத்த, சமண மதங்களை சேர்ந்த தமிழர்கள், பலவந்தமாக இந்துக்களாக மதமாற்றம் செய்யப் பட்டனர். மதம் மாற மறுத்தவர்கள் படுகொலை செய்யப் பட்டனர்.  தமிழ் பேசும் பௌத்தர்களையும், சமணர்களையும் கழுவேற்றிக் கொன்ற கதைகளை தேவாரங்களிலும் பாடி வைத்துள்ளனர். இவைகள் எல்லாம் பல்லவர் காலத்தில் நடந்தேறின என்று வராற்று குறிப்புகள் கூறுகின்றன. ஆக‌வே நமது ஊரின் ‌பௌத்தர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்பதற்க்கு இதைவிட சிறந்த சான்று தேவையில்லை என்று கருதுகிறேன்.


இது தமிழ் நாட்டில் உள்ள திருவாரூர் மாவட்டத்தைச் தலமையிடமாக கொண்ட ஒரு இயற்கை எழில் நிறைந்த கிராமம். திருவாரூரிலிருந்து மேற்க்குப்புற பகுதியில் சுமார் 16 கிமீ தொலைவில் இது அமைந்துள்ளது மன்னார்குடியிலிருந்து லெஷ்சுமாங்குடி வழியாக திருவாரூர் செல்லும் பிரதான சாலையிலிருந்து சுமார் 1கிமீ தொலைவுக்கு உள்ளே சென்றால் இந்த ஊரை சென்றடையலாம்.

சுமாராக 10ஆயிரம் குடும்பத்தினர்கள் இவ்வூரில் வசிக்கிறார்கள். இங்கு 79 வருட மிகப்பழமை வாய்ந்த பள்ளிவாசல் ஒன்று இன்றும் அந்த கால கட்டமைப்போடு இருக்கின்றது. மேலும் 2 மதரஸாக்கள், 3 பாடசாலைகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேருந்து நிலையம், அரசு பொது நூலகம் மற்றும் 17 தெருக்களை உள்ளடக்கி அமைந்துள்ளது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்த கிராமத்தின் பிரதான தொழில் விவசாயமாகும் இவ்வூரின் கிழக்கு பகுதியில் வெண்ணாறு பாய்ந்தோடுகிறது. இது, இப்பகுதி மக்களின் வேளாண்மைக்கு பெரிதும் உதவுகிறது.

விஜயன்

இதன் மேற்க்குபுறம் பொதக்குடி என்ற ஊராட்சியும் தெற்க்குபுறம் கூத்தாநல்லூர் என்ற நகராட்சியும் அமைந்திருக்கிறது. இந்த ஊர் கூத்தாநல்லூர் காவல் நிலையம் மற்றும் மன்னார்குடி நீதிமன்ற எல்லைக்குட்பட்டுள்ளது. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக நாகப்பட்டினம் தொகுதி விஜயன் (தி.மு.க) அவர்களும், திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக திரு கலைஞர் கருனாநிதி (தி.மு.க) அவர்களும் ஊராட்சி மன்றத்தலைவராக திரு அன்னசங்கு அவர்களும், ஜமாஅத் தலைவராக ஜனாப்.அஹ்மது கபீர் அவர்களும் செயலாற்றி கொண்டிருக்கிறார்கள்.
space
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
கால வலயம் IST+5:30
அஞ்சல் 610114
தொலைபேசி 91-4367
வாகனம் TN-50
bul ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
bul மஹ்சூம் மலழையர் துவக்கப்பள்ளி
bul நேஷ்னல் மலழையர் துவக்கப்பள்ளி
வெற்றி கனியினை வெல்லும் வரையிலே பற்றிய பாதையில் செல்.
Al Maraj Stationery
Contact for Advertisement